புதையல் தோண்ட முயற்சித்த ஐவர் கைது

புதையல் தோண்ட முயற்சித்த ஐவர் கைது

புதையல் தோண்ட முயற்சித்த ஐவர் கைது

எழுத்தாளர் Staff Writer

04 Oct, 2014 | 6:35 pm

புத்தளம் நெலும்வெவ பகுதியிலுள்ள காட்டில் புதையல் தோண்ட முயற்சித்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பபை அடுத்து சந்தேகநபர்கள் இன்று அதிகாலை 3.45 அளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை, ஆணமடுவ மற்றும் அநுராதபுரம் பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்