நீர்கொழும்பு – கண்டி அதிவேக வீதியினூடான போக்குவரத்துக்கு விசேட திட்டம்

நீர்கொழும்பு – கண்டி அதிவேக வீதியினூடான போக்குவரத்துக்கு விசேட திட்டம்

நீர்கொழும்பு – கண்டி அதிவேக வீதியினூடான போக்குவரத்துக்கு விசேட திட்டம்

எழுத்தாளர் Staff Writer

04 Oct, 2014 | 10:07 am

நீர்கொழும்பு மற்றும் கண்டி வீதிகள் ஊடாக வாகனங்கள் கட்டுநாயக்க அதிவேக மார்க்கத்தினுள் பிரவேசிப்பதை கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.

இதன் பிரகாரம் வார நாட்களில் காலை 7 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் நீர்கொழும்பு மற்றும் கண்டி வீதிகள் ஊடாக கட்டுநாயக்க அதிவேக மார்க்கத்தினுள் வாகனங்கள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

காலை 9 மணியின் பின்னர் வாகனங்கள் நீர்கொழும்பு மற்றும் கண்டி வீதிகள் ஊடாக உட்பிரவேசிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வீதிகள் ஊடாக வாகனங்கள் உட்பிரவேசிப்பதால் அதிவேக வீதியில் வாகன நெறிசல் ஏற்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

ஆயினும், ஏனைய காலப்பகுதிகளிலும், சனி – ஞாயிறு தினங்களிலும், பொது விடுமுறை தினங்களிலும் இந்த கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட மாட்டாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்