ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களால் மற்றுமொரு பிரித்தானிய பிரஜை சிரச்சேதம்(video)

ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களால் மற்றுமொரு பிரித்தானிய பிரஜை சிரச்சேதம்(video)

எழுத்தாளர் Staff Writer

04 Oct, 2014 | 9:15 am

ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களால்  தடுத்துவைக்கப்பட்டிருந்த அலென் ஹென்னிங் என்ற பிரித்தானியப்பிரஜை கொலை செயய்ப்பட்டதற்கான  வீடியோ ஆதாரம் வெளியிடப்பட்டுள்ளது.

சிரியாவில் இடம்பெற்றுவரும் நிவாரணப் பணிகளில் பணியாற்றிய ஹென்னிங் கடந்த டிசம்பர் மாதம் ஐஎஸ் கிளர்ச்சியாளர்களால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

கிளர்ச்சியாளர்கள்  முன்பாக மண்டியிட்டு இருக்கும் ஹென்னிங்  சிரச்சேதம் செய்யப்படுவது குறித்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொடூர கொலை புரியும் கொலைகாரர்களை சட்டத்தின் முன் கொண்டு வந்து உரிய தண்டனை அளிக்கப்பட வேண்டுமென பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் குறிப்பிட்டுள்ளார்

தனது கணவனை விடுவிக்குமாறு அலென் ஹென்னிங்கின் மனைவி கிளர்ச்சியாளர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதற்கு முன்னர் அமெரிக்கப் பிரஜை ஒருவரையும் பிரித்தானியப் பிரஜை ஒருவரையும் சிரச்சேதம் செய்யும் வீடியோ கிளர்ச்சியாளர்களால் வெளியடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்