வெற்றிலைக்கேணியில் பொதுமக்களின் எதிர்ப்பினை அடுத்து காணி அளவீட்டு நடவடிக்கை கைவிடப்பட்டது

வெற்றிலைக்கேணியில் பொதுமக்களின் எதிர்ப்பினை அடுத்து காணி அளவீட்டு நடவடிக்கை கைவிடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2014 | 9:41 pm

யாழ்ப்பாணம் வடமராச்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வெற்றிலைக்கேணி பகுதியில் முன்னெடுக்கப்படவிருந்த காணி அளவீட்டு நடவடிக்கை தடுத்துநிறுத்தப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் வெளியிடப்பட்ட எதிர்ப்பினால், அளவீட்டு நடவடிக்கை கைவிடப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

வெற்றிலைக்கேணி பிரதேசத்தில் காணியை அளவிடுவதற்காக நில அளவையாளர்கள் வருகைதந்தனர்.

அந்தப் பகுதியில் ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களும், மக்கள் பிரதிநிதிகளும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, காணி அளவிடும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

அத்துடன் காணி உரிமையாளர்கள் தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில்  மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

jaffna 3


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்