மாலபே தனியார் மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசாங்க வைத்தியசாலையில் பயிற்சி

மாலபே தனியார் மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசாங்க வைத்தியசாலையில் பயிற்சி

மாலபே தனியார் மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசாங்க வைத்தியசாலையில் பயிற்சி

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2014 | 1:12 pm

மாலபே தனியார் மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசாங்க வைத்தியசாலையில் பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்கு உயர்நீதிமன்றத்தில்  சுகாதார அமைச்சு இன்று இணக்கம் தெரிவித்துள்ளது.

ஈவா வனசுந்தர மற்றும்  சந்திரா ஏக்கநாயக்க ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இது தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற போதே சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி சுகாதார அமைச்சர் உயர்கல்வி அமைச்சர் , பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு   உள்ளிட்ட 10 பேருக்கு மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டம் பெறும் எதிர்பார்ப்பில் உள்ள ஐவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு இன்று வாபஸ் பெறப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்