மயிலங்கரச்சை மலைமகள் வித்தியாலய ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவனுக்கு தொடர்ந்தும் சிகிச்சை

மயிலங்கரச்சை மலைமகள் வித்தியாலய ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவனுக்கு தொடர்ந்தும் சிகிச்சை

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2014 | 9:00 pm

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலங்கரச்சை மலைமகள் வித்தியாலத்தில் ஆசிரியரினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் மாணவன் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான்.

கடந்த 26ஆம் திகதி குறித்த சிறுவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டான்.

ஆசிரியரால் குறித்த சிறுவன் மேசையில் தூக்கி அடிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தையை இழந்த இந்த சிறுவனின் தாய் சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக பணியாற்றி வருவதுடன், தாம் பாதுகாவலராக இருப்பதாக அவனது பாட்டனார் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் கல்குடா வலயக் கல்வி பணிப்பாளருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக மலைமகள் வித்தியாலயத்தின் அதிபர் நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்