மட்டுவில்நாடு பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் உயிரிழப்பு

மட்டுவில்நாடு பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் உயிரிழப்பு

மட்டுவில்நாடு பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2014 | 2:49 pm

யாழ்ப்பாணம்-பூநகரி ஏ 32 வீதியிலுள்ள மட்டுவில்நாடு பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 5.45 அளவில் வீதியை கடக்க முயற்ற 62 வயது பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும் விபத்தில் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்