ப்ளெட்டினம் விருதுகள்; வாகனத் தொடரணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

ப்ளெட்டினம் விருதுகள்; வாகனத் தொடரணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2014 | 3:49 pm

ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் மொபிடெல் ப்ளெட்டினம் விருதுகளுக்கான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது.

கிராமங்கள் தோறும் எமது வாகனத் தொடரணியுடன் இணைந்து கொள்வதன் மூலம் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் திறமையை வெளிப்படுத்திய இந்த நாட்டின் வீர, வீராங்கனைகளை பெருமைப்படுத்துவதே நியூஸ்பெஸ்ட் – மொபிடெல் விருதின் உயரிய நோக்கமாகும்.

இந்த வாகனத் தொடரணி இன்று காலை யாழ். நகர மத்தியிலிருந்து ஆரம்பமானது.

விருதினை எதிர்பார்க்கும் வீர, வீராங்கனைகளுக்கு இந்த வாகனத் தொடரணியில் விண்ணப்பபடிவங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

உங்கள் மாகாணத்தின் சிறந்த வீர, வீராங்கனையின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசு மூன்றினை வெல்லக் கூடிய வாய்ப்பு இரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வாகனத் தொடரணி நாளை கிளிநொச்சி நகரை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0710 420 420  என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் இந்த விருது தொடர்பான  தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

platinum awards 2 platinum awards 1

நகரங்களுக்கு ஊடான வாகனத் தொடரணியின் போது விளைாயாட்டுத் துறையில் சாதித்த மாணவர்களை கெளரவிக்கும் பணியினையும் ‘ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் மொபிடெல் ப்ளெட்டினம் விருதுகள்’ முன்னெடுத்துள்ளது.

அந்த வகையில் இன்றைய தினம் யாழ். அருணோதயா கல்லூரியின் ஏ.பவித்திரா கௌரவிக்கப்பட்டார்.

platinum awards


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்