நுவரெலியாவிற்கு தமிழ் கல்வி அமைச்சர் தேவை – ஜே.ஸ்ரீறங்கா

நுவரெலியாவிற்கு தமிழ் கல்வி அமைச்சர் தேவை – ஜே.ஸ்ரீறங்கா

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2014 | 10:18 pm

நுவரெலியா மாவட்டத்திற்கு தமிழ் கல்வி அமைச்சர் ஒருவர் தேவையென பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீறங்கா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரும் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான ஜே.ஸ்ரீறங்காவின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து லிந்துலை அக்கரகந்தை தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மண்டபத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது, இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விழாவிற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீறங்காவினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த திறப்பு விழாவை முன்னிட்டு மலையகத்தின் பல பகுதிகளிலும் இருந்து வருகை தந்த நாதஸ்வர வித்துவான்களின் இசைக் கச்சேரியும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து இசைக் கச்சேரியில் கலந்து கொண்டவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீறங்கா பதக்கங்களை அணிவித்து சான்றிதல்களையும் வழங்கி வைத்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்