நந்திக்கடலில் மீன்கள் உயிரிழந்தமை தொடர்பில் ஆய்வு

நந்திக்கடலில் மீன்கள் உயிரிழந்தமை தொடர்பில் ஆய்வு

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2014 | 7:54 pm

முல்லைத்தீவு, வட்டுவாகல் – நந்திக்கடலில் மீன்கள் இறந்தமை தொடர்பில் நாரா நிறுவனம் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது.

இதற்காக நாரா நிறுவனத்தின் குழுவொன்று நந்திக்கடல் பகுதிக்கு நேரில் வருகைதந்துள்ளதாக மீன்பிடித் துறை திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் ஜெ.சுதாகரன் குறிப்பிட்டார்.

வட்டுவாகல் – நந்திக்கடல் பகுதியில் நிலவும் வெப்பநிலையால் ஏராளமான மீன்கள் கடந்த சில தினங்களாக இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கரையொதுங்கியுள்ள மீன்களை மண்ணில் புதைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்