கெமிதிரிய செயற்றிட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

கெமிதிரிய செயற்றிட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

கெமிதிரிய செயற்றிட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2014 | 1:55 pm

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட கெமிதிரிய செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

நுவரெலியா, கரவனெல்ல, மொனராகலை, இரத்தினபுரி உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கெமிதிரிய திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்ததாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

கரவனெல்ல நகரிலும் கெமிதிரிய திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி புதிய நகரத்தில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் பெருந்திரளானவர்கள் பங்கேற்றிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயிடம் வினவியபோது,  கெமிதிரிய திட்டம் உலக வங்கியின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுவந்ததாக தெரிவித்தார்.

செயற்றிட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த கால எல்லை நிறைவடைந்துள்ளபோதிலும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட செயற்றிட்டங்களை பூர்த்தி செய்வதற்கான நிதியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கியுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்