‘கிறிஸ்மஸுக்கு முன்னர் சோனியா, ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவேன்’; சுப்ரமணியன் சுவாமி சூளுரை

‘கிறிஸ்மஸுக்கு முன்னர் சோனியா, ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவேன்’; சுப்ரமணியன் சுவாமி சூளுரை

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2014 | 10:27 pm

இந்திய கங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது புதல்வர் ராகுல் காந்தி ஆகியோரை எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னர் சிறைக்கு அனுப்பவுள்ளதாக பாரதீய ஜனதாக் கட்சியின் தந்திரோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவிக்கின்றார்.

ஜெயலலிதா ஜெயராமிற்கு எதிராக வழக்குத் தாக்குதல் செய்த கலாநிதி சுப்ரமணியன் சுவாமி நேற்று பெங்களூரில் தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பில் இந்திய ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளன.

ஜெயலலிதா ஜெயராமுக்கு எதிராக வழங்கிய தீர்ப்பு நியாயமான தீர்ப்பு என்றும் அந்த தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் தர்மத்திற்கு கட்டுப்பட்டு தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் கலாநிதி சுப்ரமனியன் சுவாமி நேற்று பெங்களூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி மற்றும் அவரது புதல்வர் ராகுல் காந்தி ஆகியோர் தமது அடுத்த இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

​நெஷனல் ஹெரல்ட் பத்திரிகை கொள்வனவின் போது இடம்பெற்ற பணப்பரிமாற்றம் தொடர்பாக அவர்களுக்கு எதிராக வழக்குத் தக்கல் செய்யவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுப்ரமணியன் சுவாமியினால் 18 வருடங்களுக்கு முன்னர் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு தற்போது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா ஜெயராம் பிணை வழங்கக்கோரி கர்நாடக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்