லிந்துலை வைத்தியசாலை ஊழியர்கள் மீது தாக்குதல்; நால்வர் கைது

லிந்துலை வைத்தியசாலை ஊழியர்கள் மீது தாக்குதல்; நால்வர் கைது

லிந்துலை வைத்தியசாலை ஊழியர்கள் மீது தாக்குதல்; நால்வர் கைது

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2014 | 1:26 pm

லிந்துலை பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரை பார்வையிட சென்ற சிலரே, ஊழியர்கள் மீது நேற்றிரவு ஏழு மணியளவில் தாக்குதல் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு இலக்கான ஊழியர் நுவரெலியா வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லிந்துலை வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி அர்ஷ அபேவர்தன குறிப்பிட்டார்.

நோயாளர் பார்வை நேரம் நிறைவடைந்ததன் பின்னர் இரவு ஏழு மணியளவில் பத்து பேர் கொண்ட குழுவினர் நோயாளர் விடுதிக்குள் பிரவேசித்ததாக அவர் கூறினார்.

இதன்போது வைத்தியசாலை ஊழியர்களுக்கும், அந்த குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து மோதல் நிலவியுள்ளது.

மோதலில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மதுபோதையுடன் வைத்தியசாலைக்குள் பிரவேசித்துள்ளமை சட்டவைத்திய அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பத்து சந்தேகநபர்களில் நான்கு பேர் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்