மோடியை சந்திக்கின்றார் ஜனாதிபதி

மோடியை சந்திக்கின்றார் ஜனாதிபதி

மோடியை சந்திக்கின்றார் ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2014 | 11:24 am

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி பேச்சாளர் மொஹான் சமரநாயக்க குறிப்பிடுகின்றார்.

மோல்டா ஜனாதிபதி ஜோசப் மஸ்கட் மற்றும் கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா ஆகியோரை ஜனாதிபதி நேற்று சந்தித்து கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் பிரதமர் டொனி அபொட்டை இலங்கை நேரப்படி நேற்று மாலை ஜனாதிபதி சந்தித்ததாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

அத்துடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, கென்ய ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 69 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நியூயோர்க் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்