மலையகத்திற்கான ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்

மலையகத்திற்கான ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்

மலையகத்திற்கான ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2014 | 9:25 am

மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்த ரயிலொன்று இங்குருஓயா பகுதியில் தடம்புரண்டுள்ளதாக கொழும்பு ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது.

இதன் காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி நேற்றிரவு புறப்பட்டுச் சென்ற தபால் ரயில், நாவலப்பிட்டியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

பதுளையில் இருந்து நேற்று மாலை 5. 05 க்கு கொழும்பு கோட்டை நோக்கி புறப்பட்ட தபால் ரயில், ஹட்டன் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்தில் தாமதம் நிலவியுள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்