பண்டாரவளை சம்பவம் தொடர்பில் ஆராய விசேட விசாரணை குழு நியமனம்

பண்டாரவளை சம்பவம் தொடர்பில் ஆராய விசேட விசாரணை குழு நியமனம்

பண்டாரவளை சம்பவம் தொடர்பில் ஆராய விசேட விசாரணை குழு நியமனம்

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2014 | 2:32 pm

பண்டாரவளை பொலிஸ் நிலையத்தினுள் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பொலிஸ் விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகின்றது.

கடந்த 20 ஆம் திகதி பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயினும் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பண்டாரவளை பொலிஸாரும் அந்த இடத்தில் இருந்தமையால், அங்கு விசேட பொலிஸ் விசாரணைக் குழுவொன்றை ஈடுபடுத்துவதற்கு பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.

இதன் பிரகாரம் பொலிஸ் விசேட விசாரணைக் குழு பண்டாரவளைக்குச் சென்று அதுதொடர்பான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இந்த மோதல் சம்பவம் குறித்து விடயங்கள் திரட்டப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எவரேனும், அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையிலோ அல்லது சட்டவிரோத ஒன்றுகூடலில் ஈடுபட்டிருந்தால், அத்தகையர்வகளை கட்சி பேதமின்றி கைதுசெய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்