பண்டாரவளையில் 25 பேருக்கு குளவிக் கொட்டு

பண்டாரவளையில் 25 பேருக்கு குளவிக் கொட்டு

பண்டாரவளையில் 25 பேருக்கு குளவிக் கொட்டு

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2014 | 1:32 pm

பண்டாரவளை நாயபெத்த தோட்டத்தல் 25 பெண்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர்  தெரிவித்தார்.

நாயபெத்த தோட்ட தொழிலாளர்களில் சிலரே இன்று முற்பகல் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவிக் கொட்டுக்கு இலக்கான 25 பெண்களில் சிலர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்