நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் பிரகடனம்

நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் பிரகடனம்

நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் பிரகடனம்

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2014 | 10:49 am

மழையுடனான வானிலையின் காரணமாக நான்கு மாவட்டங்களில் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேகாலை, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களின் சகல பிரதேச செயலக பிரிவுகளிலும் இந்த அபாய எச்சரிக்கை அமுலில் உள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் கொத்மலை பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்