ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு; தமிழகம் முழுவதும் பதற்றம்

ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு; தமிழகம் முழுவதும் பதற்றம்

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2014 | 4:48 pm

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, தமிழகத்தில் அ.தி.மு.க ஆதரவாளர்கள் ஆங்காங்கே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேநேரத்தில், பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நீடித்துள்ளது.

ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் கோயில் அருகே உள்ள கடைகளை மூடக்கோரி அ.தி.மு.க ஆதரவாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர். அங்கு இதனால் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

இதேவேளை, போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தஇந்து செய்தி வெளியிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்