கிளிநொச்சியில் காணாமற்போனோர் தொடர்பில் சாட்சியங்கள் பதிவு

கிளிநொச்சியில் காணாமற்போனோர் தொடர்பில் சாட்சியங்கள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2014 | 10:58 am

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட சாட்சி விசாரணைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் 30 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த சுமார் 200 பேரிடம் சாட்சிகள் பதிவுசெய்யப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவிக்கின்றார்.

சாட்சிகளை பதிவுசெய்யும் நடவடிக்கை இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் மற்றும் சாட்சி பதிவுகள் ஏற்கனவே நடைபெற்றுள்ளன.

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 20 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்