பொகவந்தலாவையில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 15 வயது சிறுமி கர்ப்பம்; சந்தேகநபர் கைது

பொகவந்தலாவையில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 15 வயது சிறுமி கர்ப்பம்; சந்தேகநபர் கைது

பொகவந்தலாவையில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 15 வயது சிறுமி கர்ப்பம்; சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2014 | 5:52 pm

பொகவந்தலாவை டின்சின் தோட்டத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி மூன்று மாதங்கள் கர்ப்பமடைந்த நிலையில், கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவகம் தெரிவிக்கின்றது.

வைத்தியசாலை அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, சந்தேகநபர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தலவாக்கலை – லிந்துல பகுதியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்