புதிய கட்டணம் தொடர்பில் திறைசேரியிடம் இலங்கை மின்சார சபை கோரிக்கை

புதிய கட்டணம் தொடர்பில் திறைசேரியிடம் இலங்கை மின்சார சபை கோரிக்கை

புதிய கட்டணம் தொடர்பில் திறைசேரியிடம் இலங்கை மின்சார சபை கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2014 | 11:05 am

கட்டணம் குறைக்கப்பட்டுள்ள மின்சார பட்டியல்களை தயாரிக்கும் வழிமுறை தொடர்பில் அறிவிக்குமாறு திறைசேரியிடம் இலங்கை மின்சார சபை எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

மின்சார சபையின் தலைவரினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சபையின் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொதுமுகாமையாளருமான செனஜித் தசநாயக்க குறிப்பிடுகின்றார்.

நாட்டின் ஒவ்வொரு மின் பிராந்தியங்களிலும் வெவ்வேறு கட்டணங்களின் அடிப்படையில் மின்சார பட்டியல்கள் தயாரிக்கப்படுவதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

குறிப்பாக கைத்தொழில் துறை, பொதுப் பணிகள், வணக்கஸ்தலங்கள், ஹோட்டல் துறை என வெவ்வேறு துறைகளுக்கான தனித்தனி கட்டண முறைகள் இலங்கையில் பின்பற்றப்பட்டுகின்றன.

எனவே மின்சார கட்டணங்களுக்கான புதிய வழிமுறைகள் குறித்து திறைசேரியினால் அறிவிக்கப்பட்ட பின்னர் மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஊடாக புதிய கட்டண விபரங்களை தயாரிக்க முடியும் என இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்