புகலிடக் கோரிக்கையாளர்கள் கப்பலில் இருந்து இறங்க மறுப்பு

புகலிடக் கோரிக்கையாளர்கள் கப்பலில் இருந்து இறங்க மறுப்பு

புகலிடக் கோரிக்கையாளர்கள் கப்பலில் இருந்து இறங்க மறுப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2014 | 6:19 pm

சைப்ரஸ் கடற்பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்ட கப்பலிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் அதிலிருந்து இறங்குவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

தாம் சிரிய அகதிகள் என கூறியுள்ள அவர்கள், இத்தாலிக்கு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளதாக சைப்பிரஸ் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

எனினும் கப்பலில் இருந்து இறக்கப்பட்ட அவர்கள் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கப்பலில் 52 சிறுவர்களும் இருந்ததாக சைப்ரஸ் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டு மோதல்கள் காரணமாக கடற்பயணங்கள் மூலம் இத்தாலிக்கு செல்வோரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்