‘ஸ்போர்ட்டஸ் பெஸ்ட் மொபிடெல் பிளாற்றினம் விருதுகள்’; விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு

‘ஸ்போர்ட்டஸ் பெஸ்ட் மொபிடெல் பிளாற்றினம் விருதுகள்’; விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு

‘ஸ்போர்ட்டஸ் பெஸ்ட் மொபிடெல் பிளாற்றினம் விருதுகள்’; விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2014 | 5:25 pm

ஸ்போர்ட்டஸ் பெஸ்ட் மொபிடெலுடன் இணைந்து பெருமையுடன் வழங்கும் ‘பிளாற்றினம் விருதுகள் 2014’ தொடர்பில் அறிமுகப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

சாதித்தவர்கள் பலர், தோல்வியடைந்தோர் சிலர் வரலாற்றை மாற்றியவர்களோ வெகுசிலர்!

விளையாட்டுத்துறைக்குத் தம்மை அர்ப்பணித்தவா்களுக்கு மகுடம் சூட்டும் கன்னி முயற்சி, நேரம் காலம் பார்க்காது அல்லும் பகலும் பாடுபட்டு உழைத்து சாதித்தவர்கள் மற்றும் சாதிக்கத் துடிப்பவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கி சிந்திய வியர்வையை முத்தாக்கும் சமூகப் பணியே ‘பிளாற்றினம் விருதுகள் 2014’.

அழகிய விருது வழங்கும் விழாவிற்கான அழைப்பிதழாக இன்றைய ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

வரலாற்றை மாற்றும் நியூஸ்பெஸ்ட் செய்தி ஊடகமாக மாத்திரமல்லாமல் மக்களின் வாழ்வை பிரதிபலிக்கின்றது.

உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த ‘சுப்பர் பைடர்’இனை வெற்றிகரமாக நிறைவு செய்திருந்த நாம், தொலைத்தொடர்பில் புரட்சி செய்யும் என்றும் மக்களுடன் நெருங்கியிருக்கும் மொபிடலுடன் இணைந்து இந்த புதிய முயற்சியில் கைகோர்க்கிறோம்.

எம்மவர்க்கான எமது சமர்ப்பணம். ஒலிம்பிக் கனவுகளுக்கான அர்ப்பணம்!


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்