பலஸ்தீனுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கினார் ஜனாதிபதி

பலஸ்தீனுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கினார் ஜனாதிபதி

பலஸ்தீனுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கினார் ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2014 | 6:47 pm

இலங்கையினால் உத்தியோகபூர்வமாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி இன்று பலஸ்தீனத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால், பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸிடம் இந்த நிதியுதவி கையளிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீன மக்களுக்காக இலங்கை வழங்கும் ஒத்துழைப்பு மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பாராட்டுவதாக இதன்போது கருத்து வெளியிட்ட பலஸ்தீன ஜனாதிபதி கூறியுள்ளார்.

காஸா தொடர்பிலும், அங்குள்ள மக்கள் எதிர்நோக்கிவரும் சவால்கள் தொடர்பிலும் இலங்கை மற்றும் பலஸ்தீன் தலைவர்கள் இதன்போது கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்