திருமலையில் பஸ் மோதி வயோதிபர் பலி

திருமலையில் பஸ் மோதி வயோதிபர் பலி

திருமலையில் பஸ் மோதி வயோதிபர் பலி

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2014 | 11:46 am

திருகோணமலை கோணேஸ்வரா ஆலயத்திற்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று மோதுண்டதால் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் 70 வயதான வயோதிபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் கட்டுப்பாட்டையிழந்து பின்னோக்கி நகர்ந்தபோது, பஸ்ஸின் பின்னாலிருந்த வயோதிபர் மோதுண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான வயோதிபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

விபத்து தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்