தலைமன்னாரில் மின்னல் தாக்கியதில் தம்பதியினர் காயம்

தலைமன்னாரில் மின்னல் தாக்கியதில் தம்பதியினர் காயம்

தலைமன்னாரில் மின்னல் தாக்கியதில் தம்பதியினர் காயம்

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2014 | 12:08 pm

தலைமன்னார் இறங்குதுறை பகுதியில் வீடொன்றின் மீது மின்னல் தாக்கியதில் தம்பதியினர் காயமடைந்துள்ளனர்.

இறங்குதுறை பகுதியிலுள்ள வீடொன்றின்மீது நேற்றிரவு மின்னல் தாக்கியுள்ளதுடன், அதனால் ஏற்பட்ட அதிர்வுகளினால் வீட்டிலிருந்து தம்பதியினர் காயமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

தலைமன்னார் பகுதியில் நேற்று மாலை முதல் இடி மற்றும் மின்னலுடன் இலேசான மழை பெய்துள்ளது.

மின்னல் தாக்கியதில் வீட்டிலிருந்த மின் உபகரணங்கள் சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் சுவர்களுக்கும் சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்