கிளிநொச்சி வீட்டுத் திட்டத்தில் புறக்கணிக்கப்படுவதாக சில கிராம மக்கள் குற்றச்சாட்டு

கிளிநொச்சி வீட்டுத் திட்டத்தில் புறக்கணிக்கப்படுவதாக சில கிராம மக்கள் குற்றச்சாட்டு

கிளிநொச்சி வீட்டுத் திட்டத்தில் புறக்கணிக்கப்படுவதாக சில கிராம மக்கள் குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2014 | 5:30 pm

கிளிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகளில் மக்களுக்கான வீட்டுத் திட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கண்டாவளை மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத்திட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

சிவபுரம், நாதன் குடியிருப்பு, பன்னங்கண்டி, மருதநகர், மூன்றாம் வாய்க்கால் உள்ளிட்ட சில பகுதியிலுள்ள மக்கள் வீட்டுத் திட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

வீட்டுத் திட்டத்தில் தாம் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரனிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது,  மாவட்டத்தில் காணி பிரச்சினைகள் அதிகம் காணப்படுவதாகவும், எவ்வாறாயினும் இதுவரை 60 வீதமானவர்களுக்கான வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்