ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களுடன் ஆயிரக்கணக்கான ஐரோப்பியர்கள் இணைந்துள்ளதாக தகவல்

ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களுடன் ஆயிரக்கணக்கான ஐரோப்பியர்கள் இணைந்துள்ளதாக தகவல்

ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களுடன் ஆயிரக்கணக்கான ஐரோப்பியர்கள் இணைந்துள்ளதாக தகவல்

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2014 | 12:39 pm

ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களுடன் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ஐரோப்பியர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்த்தின் பயங்ரவாதத் தடுப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரியை மேற்கோள்காட்டி பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்குலக நாடுகளின் விமானத் தாக்குதல்கள் மூலம் ஐரோப்பாவில் தாக்குதல்கள் அதிகரிக்க கூடிய ஆபத்துக் காணப்படுவதாக அவர் எச்சரித்துள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவிலுள்ள ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடந்த ஒகஸ்ட் மாதம் முதல் அமெரிக்க தலைமையிலான படையினர் 200 வரையான வரையான விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதேவேளை ஈராக்கில் விமானத் தாக்குதல்களை நடத்துவது தொடர்பில் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை ஐ எஸ் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடதக்கது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்