இலங்கைக்கான பிரிட்டிஷ் விமான சேவைகள் இடைநிறுத்தம்

இலங்கைக்கான பிரிட்டிஷ் விமான சேவைகள் இடைநிறுத்தம்

இலங்கைக்கான பிரிட்டிஷ் விமான சேவைகள் இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2014 | 10:12 am

இலங்கைக்கான தமது விமான சேவைகளை இடைநிறுத்துவதற்கு பிரிட்டிஷ் விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன் பிரகாரம் ஹீத்ரோவிலிருந்து கொழும்புக்கான தமது இறுதி சேவை அடுத்த வருடம் மார்ச் மாதம் 28 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரவுள்ளதாக பிரிட்டிஷ் விமான சேவை நிறுவனத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பிட்ட திகதியிலிருந்து தமது மாலைத்தீவிற்கான குளிர்கால விமான சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விமான சேவை இடைநிறுத்தம் காரணமாக பிரயாணிகளுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களுக்காக மன்னிப்புக் கோரியுள்ள பிரிட்டிஷ் விமான சேவை, இதன்மூலம் பாதிக்கப்படும் பிரயாணிகளின் கட்டணங்களை முழுமையாக திருப்பிச் செலுத்துவதாக அறிவித்துள்ளது.

லண்டனில் இருந்து கொழும்பிற்கான தமது சேவையை இடைநிறுத்துவது கடினமான ஒரு தீர்மானம் எனினும், கொழும்பிற்கான தமது சேவை இலாபகரமானதாக இல்லையெனவும் பிரி்ட்டிஷ் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்