ஆசிய விளையாட்டு விழா 2014; சீனாவின் தங்க வேட்டை தொடர்கிறது

ஆசிய விளையாட்டு விழா 2014; சீனாவின் தங்க வேட்டை தொடர்கிறது

ஆசிய விளையாட்டு விழா 2014; சீனாவின் தங்க வேட்டை தொடர்கிறது

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2014 | 4:22 pm

ஆசிய விளையாட்டு விழாவில் சீனா தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

தென்கொரியாவில் நடைபெறுகின்ற இந்த விழாவில் 88 தங்கம் 47 வெள்ளி 37 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 172  மொத்தப் பதக்கங்களைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது.

31 தங்கப் பதக்கங்கள் அடங்கலாக 103 மொத்தப் பதக்கங்களைப் பெற்றுள்ள தென்கொரியா இரண்டாவது இடத்தையும் 29 தங்கப் பதக்கங்களுடன் தென்கொரியா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

8 தங்கங்கள் உள்ளடங்களாக 34 மொத்தப் பதக்கங்களுடன் கசஸ்தான் நான்காம் இடத்தையும் 6 தங்கங்கள் அடங்கலாக 22 மொத்தப் பதக்கங்களுடன் வடகொரியா ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளன.

ஒரு தங்கப் பதக்கம் அடங்கலாக 17 மொத்தப் பதக்கங்களைப் பெற்றுள்ள இந்தியா 16ஆவது இடத்தையே பெறமுடிந்துள்ளது.

ஆசிய விளையாட்டு விழா அடுத்த மாதம் நான்காம் திகதி வரை நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்