ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கம்

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2014 | 9:14 am

17 ஆவது விளையாட்டு விழாவில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது.

வெண்கல பதக்கத்திற்காக நடைபெற்ற போட்டியில் சீன மகளிர் அணியை 5 விக்கட்களால் இலங்கை மகளிர் அணி தோற்கடித்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சீன மகளிர் அணி, 20 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

66 ஓட்ட வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை மகளிர் அணி 17.1 ஓவர்களில் 5 விக்கட்களை மாத்திரம் இழந்த வெற்றியிலக்கை எட்டியது.

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை சுவிகரித்த முதலாவது பதக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்