மூன்று வெவ்வேறு பகுதிகளில் மூவர் கொலை

மூன்று வெவ்வேறு பகுதிகளில் மூவர் கொலை

மூன்று வெவ்வேறு பகுதிகளில் மூவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

22 Sep, 2014 | 2:12 pm

கேகாலை, நாகொடை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் மூவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நாகொடை வாடுவெலிவிட்ட பகுதியில் நேற்று இரவு  10 மணியளவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட  30 வயதான ஒருவர் கொலை செய்யப்பட்டதாக   பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாய்த்தர்க்கம் முற்றியதை அடுத்து  தனது தந்தை மேற்கொண்ட தாக்குதலில்   குறித்த நபர் உயிரிழந்துள்ளார்

சந்தேகநபர் இதவரை கைது செய்யப்படவில்லை.

இதேவேளை புத்தளம்.வேப்பைமடு பகுதியில் 30 வயதான பெண்  கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

குறித்த பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த ஒருவர் அவரது வீட்டின் அறைக்கு மண்ணெணெய் ஊற்றி தீ வைத்ததாக   தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது எரிக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இதேவேளை, கேகாலை தெமட்டகொல்ல  பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி  ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்தவர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்   இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

36 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் தெரியாத இருவர் தனது தந்தையின் கழுத்தை நெரித்து அவருடன் சண்டையிடுவதை  குறித்த நபர்  கண்டுள்ளார்.

தந்தையை காப்பாற்றுவதற்காக    சென்றபோது அவர்மீது  தாக்குதல்  நடத்தப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்