மரியோ பெலோடெலிக்கு எதிராக இனவெறி கருத்து; விசாரணைகள் ஆரம்பம்

மரியோ பெலோடெலிக்கு எதிராக இனவெறி கருத்து; விசாரணைகள் ஆரம்பம்

மரியோ பெலோடெலிக்கு எதிராக இனவெறி கருத்து; விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

22 Sep, 2014 | 5:33 pm

இத்தாலி மற்றும் லிவர்பூல் அணிகளின் வீரர் மரியோ பெலோடெலி தொடர்பில் இனவெறி ரீதியில் கருத்துக்கள் வெளியிடப்பட்டமை குறித்து மெட்ரோ பொலிட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

லிஸ்டசெயார் கழகத்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் மென்செஸ்டர் யுனைட்டட் கழகம் 5-3 என்ற கோல்கள் கணக்கில் தோல்வி அடைந்திருந்தது.

இந்த தோல்வி குறித்து மென்செஸ்டர் கழகத்தின் முன்னாள் வீரரான மரியோ பெலோடெலி சமூக வலைத்தளமான ட்விட்டரில் கருத்து வெளியிட்டதை அடுத்து இனவெறியை தூண்டும் வகையில் தகவல் அனுப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மரியோ பெலோடெலி தொடர்பில் இனவெறித் தகவலை யார் எங்கிருந்து அனுப்பினார்கள் என்பதை முதலில் கண்டறிய உள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்