புதுக்குடியிருப்பில் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

புதுக்குடியிருப்பில் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

22 Sep, 2014 | 8:38 pm

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு சந்தைப் பகுதியிலிருந்து இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் பேரணியாக புதுகுடியிருப்பு பிரதேச செயலகம் வரை சென்றது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், பிரதேச செயலக நிர்வாகத்திடம் தமது பிரச்சினைகள் அடங்கிய மகஜரொன்றை கையளித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட 200ற்கும் அதிகமானவர்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்றிருந்ததாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்