சாதரண தரப் பரீட்சைக்கு ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம்

சாதரண தரப் பரீட்சைக்கு ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம்

சாதரண தரப் பரீட்சைக்கு ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம்

எழுத்தாளர் Staff Writer

22 Sep, 2014 | 9:04 am

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதரண தரப் பரீட்சையில் தோற்றுவதற்காக  5 இலட்சத்து 78,135 பேர்  விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இவர்களில் 3 இலட்சத்து 70,030 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவிக்கின்றார்.

பரீட்சை நிலையங்களை ஒதுக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட மேலும் சில விடயங்களின் முதற் கட்ட நடவடிக்கைகளை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி  கல்விப் பொதுத்தராதர சாதரண தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்