கிளிநொச்சியில் மாட்டுவண்டி சவாரி போட்டி

கிளிநொச்சியில் மாட்டுவண்டி சவாரி போட்டி

கிளிநொச்சியில் மாட்டுவண்டி சவாரி போட்டி

எழுத்தாளர் Staff Writer

22 Sep, 2014 | 5:24 pm

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மாட்டுவண்டி சவாரி போட்டியொன்று இடம்பெற்றுள்ளது.

உருத்திரபுரம் உழவர் ஒன்றிய மாட்டுவண்டி சவாரி திடலில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்தப் போட்டியில் வட மாகாணத்திலுள்ள பல அணிகள் பங்குபற்றியிருந்தன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலிருந்து பல சவாரியாளர்கள் இந்தப் போட்டியில் பங்கு பற்றியிருந்தனர்.

நான்கு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்தப் போட்டியில் மூன்று சுற்றுக்களாக நடத்தப்பட்டு வெற்றியணி தெரிவு செய்யப்பட்டதுடன் முதலாம் இடத்தைப் பெற்ற சவாரியாளருக்கு தங்கப் பதக்கமும் 2ஆம், 3ஆம் மற்றும் நான்காம் இடங்களைப் பெற்றவர்களுக்கு பணப் பரிசும் வழங்கப்பட்டன.

அருகிவரும் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டுவண்டி சவாரியை ஊக்குவிக்கும் முகமாக குறித்த போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்