ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கட்சியின் தலைமைத்துவ சபையிலிருந்து விலகினார்

ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கட்சியின் தலைமைத்துவ சபையிலிருந்து விலகினார்

ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கட்சியின் தலைமைத்துவ சபையிலிருந்து விலகினார்

எழுத்தாளர் Staff Writer

22 Sep, 2014 | 12:14 pm

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க கட்சியின் தலைமைத்துவ சபையிலிருந்து விலகியுள்ளார்.

நீண்ட காலமாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்துவரும் திஸ்ஸ அத்தநாயக்க கட்சியின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒருவராவார்.

தலைமைத்துவ சபையிலிருந்து அவர் விலகியதனை அடுத்து, தலைமைத்துவ சபையை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் குறைவடைந்துள்ளது.

பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் பதவி விலகலை அடுத்து  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷிம் மற்றும் ருவன் விஜேவர்த்தன தவிர்ந்த ஏனைய அனைவரும் வேறு கட்சிகளில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்