இராணுவ தேவைகளுக்காக காணிகளை கையகப்படுத்த அனுமதி இல்லை – சீ.வி.விக்னேஷ்வரன்

இராணுவ தேவைகளுக்காக காணிகளை கையகப்படுத்த அனுமதி இல்லை – சீ.வி.விக்னேஷ்வரன்

எழுத்தாளர் Staff Writer

22 Sep, 2014 | 9:23 pm

பொதுவசதிகளை மேம்படுத்த காணிகளை கையகப்படுத்தினாலும், இராணுவ தேவைகளுக்காக காணிகளை கையப்படுத்த சட்டத்தில் அனுமதி இல்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் வசிக்கும் சில குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கும் நிகழ்வின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

சபாபதிபிள்ளை நலன்புரி முகாமில் வசிக்கும் பெண் தலைமைத்துவத்தை கொண்ட 50 குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் வட மகாணா சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்