வங்கிகளின் வட்டி வீதம் குறைவடைந்துள்ளது – மத்திய வங்கி

வங்கிகளின் வட்டி வீதம் குறைவடைந்துள்ளது – மத்திய வங்கி

வங்கிகளின் வட்டி வீதம் குறைவடைந்துள்ளது – மத்திய வங்கி

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2014 | 10:36 pm

வட்டி வீதம் தொடர்ந்தும் குறைந்துச் செல்வதற்கான வாய்ப்புள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.

கடந்த வாரம் நிறைவுடையும் போது அடிப்படை கடன் வட்டியின் வீதமான முறிகள் மீதான வட்டி 7.15 வீதமாக காணப்பட்டதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

வர்த்தக வங்கிகளின் சாதாரண கடன் வட்டி வீதம் ஆகஸ்ட் மாதம் அளவில் 13.53 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய  புள்ளி விபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம்  வரை 15.9 மூன்று வீதமாகவே காணபப்பட்டது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தின் பின்னரான காலப்பகுதியிலிருந்து 10.1 வீதமாக காணப்பட்ட சேமிப்பு வைப்பிற்கான சாதாரண வட்டி வீதம், தற்போது 7.02 வீதம் வரை குறைவடைந்துள்ளது.

நிலையான வைப்புகளுக்கான கடன் வட்டி வீதம் கடந்த வருடம் ஆகஸ்ட்  மாதம் வரை 12.8 இரண்டு வீதமாக காணப்பட்டதுடன் அதன் பின்னரான காலப்பகுதியில் அது 8.4 நான்கு வீதமாக குறைவடைந்து காணப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்