மொனராகலையில் முழுமையான வெற்றியை பதிவு செய்தது கூட்டமைப்பு (Special Report)

மொனராகலையில் முழுமையான வெற்றியை பதிவு செய்தது கூட்டமைப்பு (Special Report)

மொனராகலையில் முழுமையான வெற்றியை பதிவு செய்தது கூட்டமைப்பு (Special Report)

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2014 | 8:03 am

மொனராகலை மாவட்டத்தில் பிபிலை, மொனராகலை, வெல்லவாய ஆகிய மூன்று தொகுதிகளிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.

பிபிலை தேர்தல் தொகுதியில் 33,307 வாக்குகளைப் பெற்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியை உறுதிபடுத்தியது.

இந்தத் தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 16,229 வாக்குகள் கிடைத்திருந்தன.

பிபிலை தேர்தல் தொகுதியில் மக்கள் விடுதலை முன்னணி 2,957 வாக்குகளை தன்வசப்படுத்தியது.

இந்தத் தொகுதியில் ஜனநாயகக் கட்சி 1,016 வாக்குகளைப் பெற்றுள்ளது

மொனராகலை மாவட்டத்தின் மொனராகலை தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 44,921 வாக்குகளைப் பெற்று வெற்றியீ்டியுள்ளது.

மொனராகலை தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி 22,456 வாக்குகளைப் பெற்றுள்ளதோடு மக்கள் விடுதலை முன்னணிக்கு 3,293 வாக்குகள் கிடைத்துள்ளன.

வெல்லவாய தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 56,990 வாக்குகளைப் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளது.

இந்தத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 35,580 வாக்குகளும் மக்கள் விடுதலை முன்னணிக்கு 8,704 வாக்குகளும் கிடைத்துள்ளன.

மொனராகலை மாவட்டத்தின் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளபோதிலும் கூட்டமைப்புக்கு இம்முறை கிடைத்துள்ள வாக்குகளின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்படுகிறது.

கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை கைப்பற்றியிருந்த போதிலும் இம்முறை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக ஐக்கிய முன்னணி ஒரு ஆசனத்தையேனும் கைப்பற்றவில்லை.

கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை மக்கள் விடுதலை முன்னணிக்கு கிடைத்துள்ள வாக்குகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய மக்கள் விடுதலை முன்னணி ஊவா மாகாண சபையில் தமது ஆசனங்களின் எண்ணிக்கையை இரண்டாக அதிகரித்துக்கொண்டுள்ளது.

10155500_773139772746283_4881008782691502182_n


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்