பதுளை மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்

பதுளை மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்

பதுளை மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2014 | 4:15 pm

பதுளை மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் பதுளை மாவட்டத்தில் அனுர விதானகமகே முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். அவர் 59,316 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சாமர சம்பத் தசநாயக்க 34,937 விருப்பு வாக்குகளையும், செந்தில் தொண்டமான் 31,858 விருப்பு வாக்குகளையும்,வசந்த குமார தெனிபிட்டிய 28,187 விருப்பு வாக்குளையும், எம். புத்ததாச 25,193 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி சார்பாக பதுளை மாவட்டத்தில் ஹரீன் பெர்னாண்டோ அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

அவர் ஒரு இலட்சத்து 73,993 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

வேலாயுதன் உருத்திரதீபன் 30,457 விருப்பு வாக்குகளையும்,சுனில் ஜயந்த கன்னங்கர 28,290 விருப்பு வாக்குளையும் பெற்று ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஊவா மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்