பதுளையில் வெற்றியை உறுதி செய்தது கூட்டமைப்பு; பலத்தை நிரூபித்தது ஐ.தே.க (Special Report)

பதுளையில் வெற்றியை உறுதி செய்தது கூட்டமைப்பு; பலத்தை நிரூபித்தது ஐ.தே.க (Special Report)

பதுளையில் வெற்றியை உறுதி செய்தது கூட்டமைப்பு; பலத்தை நிரூபித்தது ஐ.தே.க (Special Report)

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2014 | 7:52 am

ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.

பதுளை மாவட்டத்தில் ஊவா பரணகம, வெலிமடை, பதுளை, மஹியங்கனை, ஹப்புத்தளை, வியலுவ, பசறை. ஹாலி-எல, பண்டாரவளை ஆகிய அனைத்து தேர்தல் தொகுதிகளுக்குமான உத்தியோகபூர்வ முடிவுகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

இதற்கமைய ஊவா பரணகம, ஹப்புத்தளை, மஹியங்கனை, வியலுவ, பசறை, பண்டாரவளை ஆகிய தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அதிகபடியான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.

ஊவா பரணகம தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 19,127 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இந்தத் தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 18,930 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், மக்கள் விடுதலை முன்னணி 2,545 வாக்குகளை தன்வசப்படுத்தியுள்ளது.

ஹப்புத்தளை தேர்தல் தொகுதியில் 21,637 வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியை உறுதி செய்துள்ளது.

ஹப்புத்தளை தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 19,297 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணிக்கு 1,261 வாக்குகள் கிடைத்துள்ளன.

மஹியங்கனை தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 32,863 வாக்குகள் கிடைத்துள்ளதுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 25,956 வாக்குகள் கிடைத்துள்ளன.

இந்தத் தொகுதியில் மக்கள் விடுதலை முன்னணிக்கு கிடைத்துள்ள வாக்குகளின் எண்ணிக்கை 3,976 ஆகும்.

ஹப்புத்தளை தொகுதியில் தேசிய சுதந்திர முன்னணிக்கு 1,456 வாக்குகள் கிடைத்துள்ளன.

வியலுவ தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 17,650 வாக்குகள் கிடைத்துள்ளன.

வியலுவ தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி 14,695 வாக்குகளை தன்வசப்படுத்தியுள்ள அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி 958 வாக்குகளை பெற்றுள்ளது.

பசறைத் தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 23,188 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.

பசறை தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 16,426 வாக்குகள் கிடைத்துள்ளதோடு மக்கள் விடுதலை முன்னணிக்கு 800 வாக்குகள் கிடைத்துள்ளன.

பண்டாரவளை தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 27,365 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.

பண்டாரவளையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 27,085 வாக்குகள் கிடைத்துள்ளதுடன் மக்கள் விடுதலை முன்னணிக்கு 2,300 வாக்குகள் கிடைத்துள்ளன.

பதுளை மாவட்டத்தின் பதுளை, வெலிமடை மற்றும் ஹாலிஎல ஆகிய தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியை உறுதி செய்துள்ளது.

இந்த மூன்று தொகுதிகளிலும் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இம்முறை பதுளை தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 21,99 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு 15,001 வாக்குகள் கிடைத்துள்ளன.

இந்தத் தேர்தல் தொகுதியில் மக்கள் விடுதலை முன்னணிக்கு 2,271 வாக்குகள் கிடைத்துள்ளன.

வெலிமடைத் தேர்தல் தொகுதியில் 23,046 வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டியுள்ளது.

இந்தத் தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு 22,311 வாக்குகளும், மக்கள் விடுதலை முன்னணிக்கு 2,485 வாக்குகளும் கிடைத்துள்ளன.

வெலிமடை தேர்தல் தொகுதியில் ஜனநாயக ஐக்கிய முன்னணி 2,363 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஹாலி-எல தேர்தல் தொகுதியில் 23,900 வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டியுள்ளது.

இந்தத் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 21,104 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணிக்கு 1,942 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலுடன் ஒப்படுகையில் இம்முறை பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

1378012_773124002747860_2968172937478745757_n


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்