எம்.முரளிதர் ராவ் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையே சந்திப்பு

எம்.முரளிதர் ராவ் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையே சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2014 | 10:14 pm

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எம்.முரளிதர் ராவ் இன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை காரியாலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இநத சந்திப்பின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபிஸ் நஸிர் அஹமட் மற்றும் கட்சியின் பொதுச்செயலாரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி ஆகியேரும் கலந்துக்கொண்டனர்.

இதன் போது இரு நாட்டு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்