எந்தவொரு தேர்தலையும் எதிர்நோக்கக்கூடிய வாக்கு வங்கி தமக்கிருப்பதாக  கூட்டமைப்பு தெரிவிப்பு

எந்தவொரு தேர்தலையும் எதிர்நோக்கக்கூடிய வாக்கு வங்கி தமக்கிருப்பதாக கூட்டமைப்பு தெரிவிப்பு

எந்தவொரு தேர்தலையும் எதிர்நோக்கக்கூடிய வாக்கு வங்கி தமக்கிருப்பதாக கூட்டமைப்பு தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2014 | 6:33 pm

எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு தேசிய ரீதியான தேர்தலையும் எதிர்நோக்கக்கூடிய வாக்கு வங்கி தமக்கிருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதுதொடர்பாக இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த கருத்தை தெரிவித்தார்.

வழமையான மாகாண சபைத் தேர்தலில் பதிவாகின்ற வாக்குகளை விட இம்முறை தேர்தலில் கூடுதலான விகிதாசாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள எந்தவொரு தேசிய ரீதியான தேர்தலையும் எதிர்கொள்வதற்கான வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ள முடிந்துள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறினார்.

எவ்வாறாயினும், இறுதி தேர்தல் முடிவுகள் குறித்து திருப்தியடைவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் யாவும் தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு வருடங்களின் பின்னரே மீண்டுமொரு மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு உட்பட நடந்து முடிந்துள்ள சகல மாகாண சபைகளுக்குமான தேர்தல்களில் மொத்தமாக 49 இலட்சத்து 44 ஆயிரத்து 572 வாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தன்னகத்தே கொண்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்