ஊவா மாகாண சபையின் விருப்பு வாக்குகள் விபரம்

ஊவா மாகாண சபையின் விருப்பு வாக்குகள் விபரம்

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2014 | 5:42 pm

மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட முதன்மை வேட்பாளர் ஷஷீந்திர ராஜபக்ஸ 96,619 வாக்குகளை பெற்று முதலாம் இடத்தில் உள்ளார்

இரண்டாம் இடத்திலுள்ள குமாரசிறி ரத்நாயக்க 59,285 விருப்பு வாக்குகளையும், உதார சொய்ஸா 48,513 வாக்குகளையும், சாலிய சுமேத 21,206 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

செனரத் அத்தநாயக்க 19,648 விருப்பு வாக்குகளையும், விமல் கலமகஆராச்சி 17,725 விருப்பு வாக்குகளையும், ஹரேந்திர தர்மதாச 15,843 விருப்பு வாக்குகளையும்,உதய சாந்த குணசேகர 12,412 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இந்த மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஆனந்த குமாரசிறி 24,421 வாக்குகளை பெற்று அந்த கட்சி சார்பில் முன்னிலையில் உள்ளார்.

இரண்டாம் இடத்திலுள்ள டபிள்யூ. எச். எம். தர்மசேன 18,400 வாக்குகளையும், ஜானக்க திஸ்ஸ குட்டியாராச்சி 18,265 வக்குகளையும் பெற்றுள்ளனர்.

ஜயசிங்க பண்டா 16,437 விருப்பு வாக்குகளையும், சம்பத் ஜயசூரிய 15,835 விருப்பு வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக மொனராகலை மாவட்டத்தில் பெற்றுள்ளனர்.

இந்த மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆர்.எம். ஜயவர்தன 5,796 விருப்பு வாக்குகளுடன் ஊவா மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ளார்.

இதேவேளை, பதுளை மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் பதுளை மாவட்டத்தில் அனுர விதானகமகே முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். அவர் 59,316 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சாமர சம்பத் தசநாயக்க 34,937 விருப்பு வாக்குகளையும், செந்தில் தொண்டமான் 31,858 விருப்பு வாக்குகளையும்,வசந்த குமார தெனிபிட்டிய 28,187 விருப்பு வாக்குளையும், எம். புத்ததாச 25,193 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி சார்பாக பதுளை மாவட்டத்தில் ஹரீன் பெர்னாண்டோ அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

அவர் ஒரு இலட்சத்து 73,993 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

வேலாயுதன் உருத்திரதீபன் 30,457 விருப்பு வாக்குகளையும்,சுனில் ஜயந்த கன்னங்கர 28,290 விருப்பு வாக்குளையும் பெற்று ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஊவா மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்