ஊவா மாகாண சபையின் அதிகாரம் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வசம் (Special Report)

ஊவா மாகாண சபையின் அதிகாரம் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வசம் (Special Report)

ஊவா மாகாண சபையின் அதிகாரம் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வசம் (Special Report)

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2014 | 7:27 am

ஊவா மாகாண சபையின் ஆட்சியை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இம்முறை மாகாண சபைத் தேர்தலில் பதுளை மற்றும் மொனராகலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அதிகளவான ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

எவ்வாறாயினும் கடந்த மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்புக்கு கிடைத்திருந்த வாக்கு வீதத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை பதிவான வாக்குகளின் எண்ணிக்கை பெருமளவு குறைவடைந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன கடந்த மாகாண சபைத் தேர்தலை விட இம்முறை கூடுதலான வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளன.

இம்முறை ஊவா மாகாண சபைத் தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவு நேற்று நள்ளிரவுக்கு பின்னர் வெளியாகியிருந்தது.

இதற்கமைய முதலில் வெளியான மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு முடிவுகளின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வெற்றிகிடைத்திருந்தது.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் மொத்தமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இரண்டு போனஸ் ஆசனங்கள் உள்ளடங்களாக 19 ஆசனங்களை தன்வசப்படுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஊவா மாகாண சபையில் 13 ஆசனங்களும்., மக்கள் விடுதலை முன்னணிக்கு இரண்டு ஆசனங்களும் கிடைத்துள்ளன.

மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்களிப்பு முடிவுகளின் முதலில் வெளியானதுடன் அதில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 5,632 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியிருந்தது.

மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு  2,800 தபால் மூல வாக்குகள் கிடைத்திருந்ததுடன் மக்கள் விடுதலை முன்னணிக்கு 1,001 தபால் மூல வாக்குகள் கிடைத்திருந்தன.

பதுளை மாவட்ட தபால் மூல வாக்களிப்பிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கே அதிகளவிலான வாக்குகள் பதிவாகியிருந்தன.

பதுளை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு 8,810 தபால் மூல வாக்குகளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 7,274 வாக்குகளும் மக்கள் விடுதலை முன்னணிக்கு 2,087 வாக்குகளும் கிடைத்திருந்தன.

ஊவா மாகாண சபைத் தேர்தலில், பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 209,056 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதோடு, ஐக்கிய தேசியக் கட்சி 197,708 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களை தன்வசப்படுத்தியுள்ளது. இதேவேளை மக்கள் விடுதலை முன்னணி 20,626 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

இதேவேளை, மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 140,850 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதோடு, ஐக்கிய தேசியக் கட்சி 77,065 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களை தன்வசப்படுத்தியுள்ளது. இதேவேளை மக்கள் விடுதலை முன்னணி 15,955 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

10155500_773139772746283_4881008782691502182_n 1378012_773124002747860_2968172937478745757_n


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்