மண்மேடு சரிந்ததில் 4 இராணுவ உறுப்பினர்கள் பலி (Video)

மண்மேடு சரிந்ததில் 4 இராணுவ உறுப்பினர்கள் பலி (Video)

எழுத்தாளர் Staff Writer

20 Sep, 2014 | 5:13 pm

அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் 4 இராணுவ சிப்பாய்கள் உயிரிழந்துள்ளனர்.

மண் மேடொன்றிலிருந்த மண்ணை அகற்றுவதற்கு முயற்சித்த சிப்பாய்கள் மீதே இன்று பிற்பகல் மண்மேடு சரிந்து வீழ்ந்திருந்தாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த இராணுவ சிப்பாய்களின் சடலங்கள் வறக்காபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தின்போது மண்ணில் புதையுடண்ட மற்றுமொரு இராணுவ சிப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்