17 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

17 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

17 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2014 | 5:14 pm

17 ஆவது ஆசிய விளையாட்டு விழா இன்னும் சற்று நேரத்தில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.

விளையாட்டு விழாவுக்கு வருகைதரும் வீர, வீராங்கனைகளை வரவேற்கும் விசேட நிகழ்வொன்றும் நடைபெற்றது.

விளையாட்டு விழாவில் மெய்வல்லுநர், கிரிக்கெட், ஹொக்கி, றக்பி, படகுப் போட்டி, மல்யுத்தம், பளுதூக்கல், குத்துச்சண்டை மற்றும் கடற்கரை கரப்பந்தாட்டம் ஆகிய 9 வகையான விளையாட்டுக்களில் இலங்கை வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.

இவற்றில் பதக்கம் வெல்லக் கூடிய அணிகளாக மகளிர் மற்றும் ஆடவர் பிரிவு கிரிக்கெட் அணிகள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.

அணிக்கு எழுவர் கொண்ட றக்பி அணி பதக்கம் ஒன்றை வெல்லும் வாய்ப்பு இருப்பதாக அணித்தலைவர் பசில் மரிஜா கூறுகிறார்.

ஹொக்கி போட்டிகளில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளை எதிர்த்தாட வேண்டிய நிலையை இலங்கை எதிர்நோக்கியுள்ளது.

மெய்வல்லுநர் போட்டிகளில் மகளிருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் தேசிய சாம்பியனான சந்திரிகா சுபாஷினி, ஈட்டி எறிதல் தேசிய சாம்பியன் நதீகா லக்மாலி, உயரம் பாய்தல் தேசிய சாம்பியன் மஞ்சுள குமார ஆகியோர் மீதும் மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
விளையாட்டு விழாவின் அங்குரார்ப்பண வைபவம் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகியது.

இம்முறை மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை பதக்கமொன்றை வெல்வதற்கு பாரிய அர்ப்பணிப்பை செய்ய வேண்டும் என்று சிரேஷ்ட மெய்வல்லுநர் பயிற்சியளாரான யோகானந்த விஜேசுந்தர கூறுகிறார்.

சிரேஷ்ட மெய்வல்லுநர் பயிற்சியளாரான யோகானந்த விஜேசுந்தர தெரிவித்த கருத்து:-

“இம்முறை ஆசிய விளையாட்டு விழாவை இதற்கு முன்னையவற்றைவிட சற்று மாறுபட்ட விதத்தில் தான் நாம் எதிர்நோக் வேண்டியுள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டிகளுக்கு பயணமாகும் போது குறித்த இந்தப் போட்டிகளில் இந்தப் பதக்கத்தை பெரும்பாலும் எம்மால் வெல்ல முடியும் என கூறக்கூடியதாக இருந்தது. என்றாலும் இந்தமுறை அவ்வாறு கூறுவதற்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான போட்டிகளே உள்ளன. மகளிர் ஈட்டி எறிதல் தொடர்பாக எதிர்ப்பார்ப்பு உள்ளது. என்றாலும் 58 மீற்றர் தூரத்துக்கு அப்பால் வீசப்பட வேண்டும்.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்