ரயில் சமிக்ஞை கட்டமைப்பு கோளாறு; பிரதான மார்க்கத்திலான ரயில் சேவைகளில் தாமதம்

ரயில் சமிக்ஞை கட்டமைப்பு கோளாறு; பிரதான மார்க்கத்திலான ரயில் சேவைகளில் தாமதம்

ரயில் சமிக்ஞை கட்டமைப்பு கோளாறு; பிரதான மார்க்கத்திலான ரயில் சேவைகளில் தாமதம்

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2014 | 9:08 am

சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்திலான ரயில் போக்குவரத்தில் தாமதம் நிலவியுள்ளது.

ஒருகொடவத்தையில் இருந்து பல்லேவெல மற்றும் நீர்கொழும்பு வரையான சமிக்ஞை கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

பிரதான சமிக்ஞை கட்டமைப்பு செயலிழந்துள்ளமையே இதற்கு காரணமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த ரயில் நிலையங்கள் ஊடாக சமிக்ஞைகளை செயற்படுத்துமாறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து பொல்கஹாவெல வரையும், பொல்கஹாவெலயில் இருந்து கொழும்பு கோட்டை வரையும் சேவையில் ஈடுபடும் ரயில்கள் சமிக்ஞை கட்டமைப்பு கோளாறினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் பதிவாகியுள்ளன.

குறிப்பிட்ட ரயில் மார்க்கத்தில் 50 முதல் 60 வரையான ரயில்கள் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்